மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !

மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார் அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

சேகர் பாபு ஆய்வு
 
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, செய்து தருவதற்கான ஆலோசனைகளை கோயில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர் தலைமையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
 
 திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என சீமான் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு   
 
சீமான் நிறைய பேசினார், அதையெல்லாம் சொல்ல மாட்டீர்களே என செய்தியார்களிடம் கேட்டு விட்டு தொடர்ந்து பதில் அளித்தார்.. இந்த ஆட்சி நடத்தப்பட்ட பிறகு தான் பழனி, வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். என, அறிவித்து பழனியில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இன்னார் சொல்லித்தான் நடத்தப்பட வேண்டும் என்று இல்லை. எங்கள் அறங்காவலர் குழுக்கள் ஆய்வு செய்து திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் இது நடந்ததாக கூறுவதற்கும் தானாக கனிகின்ற கனியையும், எங்களது மந்திரச் சொற்களால் தான் கனிந்தது என்று கூறுவதைப் போல் உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழில் அர்ச்சனை செய்யும், அர்ச்சகர்களுக்கு வரக்கூடிய கட்டணத்தில் 60 சதவீதத்தை வழங்கிய ஆட்சி. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாயகனுடைய கொள்கை. ஆகவே திருச்செந்தூரில் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிழும் நடத்தப்படும் என தெரிவித்தார். திமுக அரசு சார்பில் அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 
 
முருக பக்தர் மாநாடு குறித்த கேள்விக்கு
 
அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்திய போது எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கவில்லை. கட்சி சார்பிலே எந்தவிதமான பேட்டியும் தரவில்லை. மதச்சார்புடைய எந்தவிதமான அடையாளமும் அங்கு பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க அறநிலையத்துறையின் பணி அது. அந்த மாநாட்டிற்கு வா என்று அழைக்கவில்லை. நாங்கள் ரசீது புத்தகத்தை அடித்துக் கொண்டு வசூலிக்கவில்லை. ரயிலை பயன்படுத்தி இலவசமாக கட்டண செலுத்தாமல் அனுமதிக்க வேண்டுமென கேட்கவில்லை. 27 நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் வந்தார்கள். இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட மாநாடு முழுக்க முழுக்க முருக பக்தர்களால் நடத்தப்பட்ட மாநாடு. 
 
2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
 
ஆனால் தற்போது நடக்க உள்ள மாநாடு அரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு.  இதுதான் மாநாடு  என்றால் பழனியில் நடைபெற்ற மாநாட்டிற்கு  என்ன பெயர் வைப்பது. இந்த ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படக்கூடிய முதல்வர் மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார் அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget