மே ஐ கம் இன் ? ரைட்டராக ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ...
Actor Sri Re Entry: மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தனித்து வாழ்ந்து வந்த நடிகர் ஸ்ரீ குணமடைந்து. ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்

நடிகர் ஸ்ரீ
வழக்கு எண் 18/9 , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , மாநகரம் , என தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீ. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான இறுகபற்று திரைப்படம் விமர்சகர்களிமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஸ்ரீ ஒரே வாரத்தில் வெளியேறினார். பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவந்தார்.
இப்படியான நிலையில்தான் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மெலிந்த உடலை பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது , லேடி பாய் பாற்றி பதிவிட்டு வந்தார். ஸ்ரீக்கு என்ன ஆச்சு என்பதுதான் அனைவரும் கேட்ட ஒரே கேள்வியாக இருந்தது
ஸ்ரீ பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டதாக சிலர் கூறினார்கள். சிலர் அவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீயின் இந்த நிலை சின்ன நடிகர்களுக்கு சினிமாத் துறையில் போதிய சம்பளமும் வாய்ப்பும் இல்லாதது பற்றி பரவலான விவாதத்தை உண்டாக்கியது.
சினிமாவில் தான் நடித்த படங்களுக்கு சரியாக சம்பளம் வராதது பற்றி நடிகர் ஸ்ரீ வெளிப்படையாக பதிவிட்டிருந்தார். தலைமுடியை கலர் செய்து உடல் மெலிந்து யாருக்கும் தெரியாமல் தனித்து வாழ்ந்து வந்தார். அவரது நண்பர்களின் உதவியோடு அவரை மீட்டனர் குடும்பத்தினர். ஸ்ரீ தற்போது சிகிச்சையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஸ்ரீ மறுபடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் ஸ்ரீ
ஸ்ரீ உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். அதே நேரம் அவர் ' மே ஐ கம் இன் ' என்கிற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
View this post on Instagram





















