BJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூ
மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதை தொடர்ந்து முருகன் மாநாட்டிற்கு பாஜக தயாராகி வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களை பாஜக தொடர்ந்து குறிவைத்து வருவது கூட்டணியில் இருக்கும் அதிமுகவை அப்செட் ஆக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடளுமன்ற தேர்தலில் நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தது பாஜக கூட்டணி. அப்போதே இருந்தே தென் மாவட்டங்களை குறிவைக்க ஆரம்பித்து விட்டதாக சொல்லப்பட்டது. குறிப்பாக முக்குலத்தோர் மற்றும் தேவேந்திர குள வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தென் மாவட்டத்தில் அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் இந்த வாக்குகள் சிதறியதாக கூறப்பட்டது. இதன் எதிரொலி தான் கடந்த நாடளுமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் பாஜகவின் அதீத வளர்ச்சிக்கு உதவியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தங்களுக்கு தென் மாவட்டத்தில் இருக்கும் செல்வக்கை இன்னும் அதிக படுத்த வேண்டும் என்ற முனைப்பில் தான் திரு நெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக அறிவித்தது தேசிய பாஜக தலைமை. அதோடு அவர் முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாஜகவிற்கு அது கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது.
இச்சூழலில் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லாத சமயத்திலேயே தென் மாவட்டங்களில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் எப்படியாவது தங்கள் கிராப்டை அதிகபடுத்த முயற்சி செய்து வருகிறது. அதன் வெளிப்பாடு தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையை குறிவைத்து அமித்ஷா நடத்திய மாநாடு என்று சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி பாஜக சார்பில் முருகன் மாநாடும் மதுரையில் தான் நடைபெற உள்ளது. இப்படி பாஜக தென் மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டி வருவது அதிமுக தென் மாவட்ட முகங்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட்ட அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை மேற்கு தொகுதியை பாஜக குறிவைக்கிறதா என்பது தொடர்பாக செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது மலுப்பலான பதிலை சொல்லியிருந்தார். இந்த சூழலில் தான் மதுரையில் முருகன் மா நாட்டை பாஜக நடத்த இருக்கிறது. தொடார்ந்து பாஜக மதுரையை குறிவைத்து வருவதால் இபிஎஸ் அதிர்ச்சியில் இருப்பதாகவும் இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொண்டால் அது பாஜகவிற்கு சாதகாமக முடிந்து விடும் என்பதால் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.





















