Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதா
எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளையாவது கேளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்தை தேமுதிக நிர்வாகிகள் நெருக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவை பலப்படுத்தும் முனைப்பிலும், சட்டமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தும் முனைப்பில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன? எதுமாதிரியான செயல்பாடுகள் மீண்டும் தேமுதிகவை முக்கியமான கட்சியாக மாற்றும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கூட்டணி தொடார்பாகவும் தங்கள் ஆதங்கத்தை பிரேமலதா முன்னிலையில் கொட்டி தீர்த்துள்ளனர் தேமுதிக நிர்வாகிகள்.
அதாவது கடந்த தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இருந்தும் ஆனால் அவர்கள் நம்மை துளிகூட மதிக்கவில்லை. அதிமுகவிற்கு நாம் கடந்த காலங்களில் உயிரை கொடுத்து வேலை பார்த்தோம் ஆனால் அவர்கள் அப்படி நமக்காக வேலை பார்ப்பதில்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், இந்த முறை எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளாவது கேட்க வேண்டும். நமக்கு யார் ஒத்துழைப்பு தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். என்றும் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்தை நெருக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருக்கலாம இல்லை வேறு கூட்டணிக்கு செல்லலாம என்பது தொடர்பக தீவிர யோசனையில் இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த்.





















