மேலும் அறிய
மீனாட்சியம்மன் கோயிலில் சக பெண் எம்பிக்கு வளையல், சாமி படத்தை வாங்கி பரிசளித்த கனிமொழி எம்.பி.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த இளம் பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

வளையல் வாங்கிக் கொடுத்த கனிமொழி எம்.பி
நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி தலைமையில் நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார்கள்.

தொடர்ந்து மதுரை மாநகராட்சி நெல்பேட்டையில் காலை உணவு திட்டம் மூலம் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்கள், அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாநகராட்சி துணை மேயர் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நிதி நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் நாடாளுமன்ற நிலை குழு உறுப்பினர்கள் தரப்பினரும் சாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக சந்தித்துக் கொண்டனர்.

அதன் பின்னர், ஆய்வை முடித்து விட்டு வந்த கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோயிலில் இருந்து புறப்பட்ட போது, கோயிலுக்கு வெளியே இருந்த வளையல் கடை ஒன்றில் ஆய்வுக்கு உடன் வந்த சக பெண் எம்.பி ஆன கீதா பென் வஜேசிங்பாய் ரத்வாக்கு கனிமொழி வளையல்களையும், சாமி படத்தையும், தாழம்பூ குங்குமத்தையும் மகிழ்ச்சியுடன் வாங்கி பரிசளித்தார்.

தொடர்ந்து பொதுமக்கள் ஒருவரின் குழந்தைக்கு ஆதன் என்ற பெயர் சூட்டினார். தொடர்ந்து கோயிலுக்கு வந்த இளம் பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aditya L1: லெக்ராஞ்சியன் 1 புள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? ஆதித்யா எல்1-க்கு உள்ள பெரிய ஆபத்து என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்





















