மேலும் அறிய
Advertisement
மதுரையில் முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்
அதிகாரிகளும், அலுவலர்களுமே மன உளைச்சலில் உள்ளோம், அவருடன் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் மாநகராட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் தெரிவித்தார்.
மாநகராட்சி பில் கலெக்டரை வீட்டிற்கு வரவழைத்து ஆபாசமாக திட்டிய மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
தி.மு.க., முன்னாள் துணை மேயரும் மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவரான பாண்டிச் செல்வியின் கணவரனுமான மிசா பாண்டியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் தி.மு.க., கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
#madurai |மாநகராட்சி பில் கலெக்டரை வீட்டிற்கு வரவழைத்து ஆபாசமாக திட்டிய மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயரை கண்டித்து நேற்று இரவு கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள். இதனால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
— arunchinna (@arunreporter92) August 29, 2023
further reports to follow @abpnadu pic.twitter.com/x4k7pdYv9I
இந்நிலையில் மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனின் அட்ராசிட்டியின் அடுத்தகட்டமாக மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் 75ஆவது வார்டு பில் கலெக்டராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் என்பவரை தனது வீட்டிற்கு வரவழைத்து, தான் வரி விதிப்பு குறித்து தான் சொன்ன வேலையை செய்யவில்லை என கூறி தரக்குறைவான ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில் மண்டலத்தலைவரின் கணவரான மிசா பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய கோரி நேற்று மாலை முதல் மழையில் நனைந்தபடி மண்டல அலுவலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாலை முதல் இரவு வரையிலும் கொட்டும் மழையிலும் நனைந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சக மாநகராட்சி அலுவலர்கள் 25க்கும் மேற்பட்டோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய பில் கலெக்டர் ராமச்சந்திரன், ”மண்டலம் 3-ல் மண்டலத்தலைவரின் கணவரே அதிகாரிகள் போல தங்களுக்கு பணி உத்தரவு வழங்குவார். மண்டலத்தலைவரின் பெயரை சொல்லி மாநகராட்சி அலுவலர்களை ஆபாசமாக திட்டிவருகிறார். இதனால் அதிகாரிகளும், அலுவலர்களுமே மன உளைச்சலில் உள்ளோம், அவருடன் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் மாநகராட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் தெரிவித்தார்.
மாநகராட்சி பில் கலெக்டரை வீட்டிற்கு வரவழைத்து ஆபாசமாக திட்டிய மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள்
மதுரையின் கிரைம் செய்தி தொடர்பாக படிக்க - Madurai Crime : சிறுமியை திசை திருப்பி, வீடு புகுந்த கொள்ளையர்கள்.. 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion