மேலும் அறிய
Advertisement
தக்காளியை வாங்க ஆளில்ல...! - திண்டுக்கல் சந்தையில் 35 டன் தக்காளிகள் தேக்கம்
’’ஆந்திராவில் இருந்து இறக்குமதியான தக்காளியால் விலை 70 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்றாலும் வாங்க ஆளில்லாததால் தேக்கம்’’
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சாணார்பட்டி, வடமதுரை, அய்யலூர், செம்பட்டி, பழனி உள்பட பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக தக்காளி கொண்டுவரப்படுகிறது.
நூல் விலையை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம்
கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை இரு மடங்காக உயர்ந்து 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும் கூடுதல் விலை கொடுத்து தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் அதன் பிறகும் தக்காளி விலை குறையவில்லை.இந்த நிலையில் தொடர்மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளியின் வரத்து குறைந்தது. இருந்த போதிலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு தக்காளி கொண்டுவரப்பட்டதால் அதன் விலை தொடர்ந்து உயராமல் இருந்தது. இதற்கிடையே ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று காலை 35 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் தக்காளியின் விலை சற்று குறைந்து கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது.
ஆனாலும் தக்காளியை வாங்கிச்செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மதியத்துக்கு மேல் தக்காளி விலை மேலும் குறைந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதும் குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை ஆனது. இதையடுத்து நேற்று காந்தி மார்க்கெட்டில் தக்காளி தேக்கமடைந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion