தமன்னாவிடம் எல்லை மீறிய பிரபல நடிகர்.. யார் அவர் தெரியுமா?.. வெளியான ஷாக்கிங் தகவல்
Tamannaah Bhatia: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக தமன்னா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை பூர்விமாக கொண்டவர் தமன்னா. இவர், கடந்த 2005ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பாலிவுட்டை தொடர்ந்து 2006-ல் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து கல்லூரி, அயன், பையா, சிறுத்தை, வீரம், சுறா போன்ற படங்களில் நடித்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தமிழை போன்று தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கும் தமன்னா, ஜெயிலர் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். காவாலா என்ற ஒரே பாட்டில் பட்டி தொட்டியெங்கும் தமன்னா பெயர் தான் அதிகம் எதிரொலிக்க தொடங்கியது. அதைத்தொடர்ந்து பாலிவுட்டிலும் ஒரு பாட்டிற்கு கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவரும் நண்பர்கள் தான் என தமன்னா தெரிவித்தார்.
ஆனால், கடந்தாண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் விஜய் வர்மாவும் தமன்னாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து காதலிப்பதை உறுதி செய்தனர். ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். காதல் பிரேக்அப்பிற்கு பிறகு தமன்னா முன்பை விட பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில், தி லாலன்டாப் என்ற டிஜிட்டல் தளத்தில் பேசிய தமன்னா, தன் மீதான வதந்திகள் மற்றும் திரைத் துறையில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அண்மையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
நான் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், சினிமா துறையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தென்னிந்திய மொழி படங்களில் நடித்த போது ஒரு முன்னணி நடிகர் ஒருவர், என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அவரது பெயரை குறிப்பிடாமல் சொன்ன தமன்னா. அந்த நடிகர் கொஞ்சம் எல்லை மீறி நடந்துகொண்டார். அவரின் செயல் எனக்கு சங்கடத்தை கொடுத்தது என மனம் திறந்து பேசியுள்ளார்.





















