மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மீன் பிடி திருவிழா.... மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள் - எங்கு தெரியுமா?
பிரம்ம சமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
![மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மீன் பிடி திருவிழா.... மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள் - எங்கு தெரியுமா? Dindigul news Fishing festival emphasizing religious harmony Villagers carrying fish - TNN மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மீன் பிடி திருவிழா.... மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள் - எங்கு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/e240518cc4116082f4445cb8ee259e471723446940321739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் அருகே உள்ளது அனைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம சமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக குளம் நிரம்பாததால் மீன்பிடித் திருவிழா நடத்தப்படவில்லை. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
Kerala Lottery Result Today (12.08.2024): WIN WIN W-782-782 : பரிசுகள் அறிவிப்பு 3 மணிக்கு..
இந்நிலையில் ஆறு வருடங்களுக்குப் பிறகு மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. பிரம்ம சமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
ஆடு திருடியதை பார்த்த நபர் கொலை; 5 ஆண்டுக்கு பின் கொலையாளி சிக்கியது எப்படி?
இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர் ஆவாரம் பட்டி. அனமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர். பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட 18 பட்டியஜவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும் , கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர். கட்லா. ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மீன்கள் வலையில் சிக்கியது.
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில் குமரன் கூறுகையில், பிரம்ம சமுத்திரம் குலம் மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பாசனம் அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து வட கிழக்கு பருவமழை துவங்குவதை வரவேற்க்கும் வகையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாரம்பரியமாக மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. 18 பட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து ஜாதி. மத பேதமின்றி மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)