UP Accident: லாரி மீது கார் மோதி விபத்து - தீயில் கருகி 8 பேர் உயிரிழப்பு! உ.பி.யில் பயங்கர சோகம்!
உத்தர பிரதேசத்தில் லாரி மீது காரி மோதி தீப்பற்றி எரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
UP Accident: உத்தர பிரதேசத்தில் லாரி மீது காரி மோதி தீப்பற்றி எரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம் போஜிபுரா என்ற பகுதியில் பரேலி - நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிரே லாரி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, இந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. லாரி மீது மோதிய கார், 25 மீட்டர் முன்னோக்கி சென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காருக்குள் இருந்த 8 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள் தவித்துள்ளனர். காரின் லாக்கை திறக்க முடியாததால், தீயில் கருகி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்போது, தீப்பற்றி கார் எரிந்துக் கொண்டிருப்பதை பார்த்த டபௌரா கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் கருகி உயிரிழந்த 8 பேரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
A horrific road accident has occurred in Bareilly, UP, a car and a dumper collided, 8 people have died due to the car catching fire.
— Just Watch (@JustWatch729) December 10, 2023
#UP #Bareilly #Accident #8death #RoadAccident #UttarPradesh #UPNews #News #viralvideo #RipShaneMacGowan #YogiAdityanathpic.twitter.com/fV9Rb3n7sc
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "போஜிபுரா பகுதியில் மாருதி சுஸுகி கார் ஒன்று விபத்தில் சிக்கியது. சாலையில் நின்றுக் கெண்டிருந்த லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். கார் சென்ட்ரல் லாக் செய்யப்பட்டதால், திறக்க இயலவில்லை. திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ” என்றார்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்:
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.