தேசிய நெடுஞ்சாலையில் கொடூரம்... போதையில் 3 இளைஞர்கள் செய்த செயலால் அதிர்ச்சி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் காரை துரத்தி சென்று கார் கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் காரை துரத்தி சென்று கார் கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் லேசாக உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்கள் காரை துரத்தி சென்று ஒருவேல்பட்டு பகுயியில் காரின் பின் பக்க கண்னாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். மேலும் 30 கிலோ மீட்டர் வரை காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சஞ்சீவி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட விழுப்புரம் அடுத்த கானை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24). ராஜா(25) மற்றும் முண்படியம்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் (22) ஆகிய மூவரை திருவெண்னை நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது மூன்று இளைஞர்களும் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

