மேலும் அறிய

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்காவின் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று இலங்கை அரசியலை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி கட்சி.

சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அக்கூட்டணிக்கு தலைமை வகித்த அனுர குமார திசாநாயக்கா அதிபரானார். பல ஆண்டுகளாக, செல்வாக்கு மிக்க கட்சிகளாக திகழ்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்தது. 

இலங்கை அரசியலை புரட்டி போட்ட NPP:

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.  

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 69 லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளது.

இதுகுறித்து இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில், "இலங்கைக்கு ஒரு வரலாற்று தருணம். தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD:

இந்தத் தருணம் தேர்தல் முடிவுகள் மட்டும் குறிக்கவில்லை. இது நம் தேசத்தின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த சின்னத்தை குறிப்பிடுகிறது. தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும் இந்த மாற்றம் மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

61.56 சதவிகித வாக்குகளுடன் இரண்டில் மூன்று பங்கு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் கட்சியாகும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் பாரம்பரிய அரசியல் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் தேர்தலை போன்று, நாடாளுமன்ற தேர்தலிலும் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியை சந்தித்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Embed widget