Morning Headlines: இந்தியாவின் மிக நீளமான பாலம்! 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines January 12: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலம்! இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மீக நீளமான பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் மக்கள் பயன்படுத்தும் பாதையை எளிதாக்குவதற்காக, பிரதமர் மோடி முன்மை டிரான்ஸ்- ஹார்பர் இணைப்பு பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த பாலத்திற்கு ‘அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி - நவ ஷேவா அடல் சேது’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான இந்த கடல் பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- பொங்கல் பண்டிகை: கிளாம்பாக்கத்தில் இருந்து 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் படிக்க..
- அரசியல் கட்சிகள் முதல் சங்கராச்சாரியார்கள் வரை! ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கபோவது யார்?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் படிக்க..
- விமானத்தில் புது அவதாரம்! ராமர், சீதை, அனுமன் கெட்டப்பில் அயோத்திக்கு சென்ற பயணிகள்!
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குஜராத்தில் இருந்து அயோத்திக்கு முதல் நேரடி விமானம் சென்றுள்ளது. அப்போது, இண்டிகோ விமானத்தில் செல்வதற்காக பயணிகள் சிலர் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் வேடத்தில் சென்று சக பயணிகளை வியப்பில் ஆழ்த்தினர். ராமர், சீதை, அனுமன் போன்ற வேடத்தில் பயணிகள் சென்றுள்ளனர். மேலும் படிக்க..
- நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்! ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சங்கம் கிராமத்தில் விபத்து நடந்துள்ளது. மேலும் படிக்க..