மேலும் அறிய

Mumbai Trans Harbour Link: கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலம்! இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று (ஜனவரி 12ம் தேதி) 27வது தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மீக நீளமான பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் மக்கள் பயன்படுத்தும் பாதையை எளிதாக்குவதற்காக, பிரதமர் மோடி முன்மை டிரான்ஸ்- ஹார்பர் இணைப்பு பாலத்தை திறந்து வைக்கிறார். 

மிக நீளமான கடல்பாலம்:

இந்த பாலத்திற்கு ‘அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி - நவ ஷேவா அடல் சேது’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான இந்த கடல் பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று (ஜனவரி 12ம் தேதி) 27வது தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த பாலத்திற்கு 2016 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாகும், இந்த பாலம் சுமார் 21.8 கி.மீ நீளம் கொண்டது. இதன் நீளம் கடலில் 16.5 கி.மீ மற்றும் நிலத்தில் சுமார் 5.5 கி.மீ தூரமும் கொண்டது. 

எதோடு எது இணைகிறது..? 

இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை ஒன்றாக இணைக்கிறது. மேலும், மும்பையிலிருந்து புனே, கோவா எளிதாக சென்று பயண நேரத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான தொடர்பையும் மேம்படுத்தும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

தொடர்ந்து, 'கிழக்கு ஃப்ரீவேஸ் ஆரஞ்சு கேட்' மற்றும் மரைன் டிரைவை இணைக்கும் சாலை சுரங்கப்பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 9.2 கிமீ நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை ரூ.8,700 கோடி செலவில் கட்டப்பட்டு மும்பையில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகும்.

சூர்யா பிராந்திய குடிநீர் திட்டத்தின் முதல் கட்டத்தையும் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 1,975 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் தானே மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பல ரயில்வே திட்டங்களையும் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, 'சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம்'- சிறப்பு பொருளாதார மண்டலம் (SEEPZ)க்கான 'பாரத் ரத்னம்' (மெகா காமன் ஃபெசிலிடேஷன் சென்டர்) ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

பாலத்தின் ஸ்பெஷல்: 

இந்த மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பில் கார்கள், டாக்சிகள், இலகுரக வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் இரண்டு அடுக்கு கொண்ட பஸ்கள் போன்ற வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டராக இருக்கும். பாலத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 40 கி.மீ. மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பானது மும்பையில் உள்ள செவ்ரியில் தொடங்கி ராய்காட் மாவட்டத்தின் உரான் தாலுகாவில் உள்ள நவா ஷேவாவில் முடிவடைகிறது.

மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள், விலங்குகள் இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. இதன் திறப்பு விழாவிற்குப் பிறகு, மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்கலாம். இதற்கு முன்னதாக இந்த பயண நேரம் 2 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget