Morning Headlines: பூடான் பிரதமராக பதவியேற்கும் ஷேரிங் டோப்கே! இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முக்கிய செய்திகள்..
Morning Headlines January 10: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
![Morning Headlines: பூடான் பிரதமராக பதவியேற்கும் ஷேரிங் டோப்கே! இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முக்கிய செய்திகள்.. top news india today abp nadu morning top india news january 10 2024 know full details Morning Headlines: பூடான் பிரதமராக பதவியேற்கும் ஷேரிங் டோப்கே! இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முக்கிய செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/600ec1243f2f9aa4e8a3b26bd9d47a111704857625351589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- பூடான்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்கும் ஷேரிங் டோப்கே!
பூடானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேரிங் டோப்கேயின் கட்சி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள பதினேழு இடங்களில் பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடானில் 47 தேசிய சட்டமன்ற தொகுதிகளில் 30 இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், டோப்கே இரண்டாவது முரையாக பூடானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். மேலும் படிக்க..
- 50 கி.மீட்டருக்கு தெய்வீக மனம்.. அயோத்யா ராமர் கோயிலுக்கு 108 அடி உயர தூபக் குச்சி.. உற்சாக வரவேற்பு
அயோத்யா ராமர் கோயிலுக்கான 108 அடி உயர தூப குச்சியாது, குஜராத்திலிருந்து சிறப்பு டிரக் மூலம் கொண்டு வரப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி ராமரின் சிலை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்ய உள்ளது. இந்த நிகழ்வு மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு ராம பக்தர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. நாட்டின் மூலை முடுக்கிலிருந்து அயோத்திக்கு சிறப்புப் பரிசுகள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு 108 அடி நீள தூபக் குச்சி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு தூபக் குச்சி திங்களன்று பரத்பூர் வழியாக ஆக்ராவில் உள்ள ஃபதேபூர் சிக்ரி மற்றும் கிராவாலியை வந்தடைந்தன. மேலும் படிக்க..
- அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா..
தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசிடமும் முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவிவிலகுவதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ஏ.ஜி. நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க..
- தமிழகமே மகிழ்ச்சி! இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதில் அரிசி மற்றும் சர்க்கர ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பான அற்விப்பு எதுவும் வெளியாகாததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் படிக்க..
- 2வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் ஓடுமா? - தடை தடை கேட்ட வழக்கு இன்று விசாரணை...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால் இன்றும் பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் படிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)