மேலும் அறிய

TN Pongal Gift: பொங்கலோ பொங்கல்..! ரூ.1000 + பரிசுத் தொகுப்பு - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

TN Pongal Gift: தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

TN Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக,  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதில் அரிசி மற்றும் சர்க்கர ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பான அற்விப்பு எதுவும் வெளியாகாததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதேசமயம் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு  ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் தகுதியான பலருக்கே பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தான், ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்குமே 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அனைத்து ரேஷன் அட்டையினருக்கும் பொங்கல் பரிசு:

அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கும் பணியை, முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில்  தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பயனாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

பரிசுத் தொகுப்பை பெறுவது எப்படி?

இதையடுத்து இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாளான வரும் 12ம் தேதியும், ரேஷன் கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று, சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

அரசாணை வெளியீடு:

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம் ஏற்படும் என்றும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்பத்தினர் பயனடைவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget