Morning Headlines: இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது சந்திரயான் 3; பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது...காலை செய்திகள் இதோ!
Morning Headlines July 14: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
Chandrayaan 3 Launch: இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது சந்திரயான் 3..! நிலவில் கால் பதிக்கப் போகும் 4வது நாடு இந்தியா..!
140 கோடி இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுமே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலத்தை உற்று நோக்க தொடங்கியுள்ளன. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிடங்கள் அளவிலான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/chandrayaan-3-set-to-launch-today-with-this-india-will-became-fourth-country-as-landed-in-moon-128779
PM Modi: பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது.. தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளி ஆரவாரம்..!
பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் சிறை தகர்ப்பு தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சிறப்பு ராணுவ அணி வகுப்பில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (ஜூலை.14) நடைபெறும் இந்நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/pm-modi-conferred-with-highest-award-grand-cross-of-the-legion-of-honour-by-france-president-macron-128784
Veeramuthuvel Chandrayaan : சந்திராயன் 3-க்கு மூளையாக செயல்பட்ட தமிழன்.. ஐஐடி மெட்ராஸில் படிப்பு.. உலகை நாடுகளை மிரள வைத்த வீரமுத்துவேல்!
சந்திரயான் 3 திட்டத்தின் மூலம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நாளை ஏவ உள்ளது. சந்திரயான் 3 திட்டம் மூலம் இந்தியா அடைந்துள்ள சாதனையை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்திருந்தாலும், திட்டத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் யார் என்பது பலருக்குத் தெரியாது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/chandrayaan-3-p-veeramuthuvel-iit-madras-graduate-who-is-the-brain-behind-isro-historic-moon-mission-128705
Vande Bharat Rail: இந்த மாதம் இத்தனையா? அசத்தும் வந்தே பாரத் ரயில்...சென்னை - நெல்லையும் லிஸ்ட்ல இருக்கும்...!
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/four-more-vande-bharat-routes-to-be-launched-this-month-amid-low-demand-128713
Priyanka Gandhi : பாட்டியின் வழியில் பிரியங்கா காந்தி.. இந்திரா காந்தி தொகுதியில் போட்டியாம்.. அதிர்ச்சியில் கே.சி.ஆர்
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைக்காத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. அதேபோல, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/pm-modi-priyanka-gandhi-may-contest-from-telangana-in-2024-elections-know-more-details-here-128666
Northern Rains: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்... மிகமிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.. மழை நிலவரம் என்ன?
ஜூன் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் அதிகப்படியான மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/uttarakhand-meghalaya-himachal-pradesh-and-other-states-will-experience-very-heavy-rains-today-and-tomorrow-according-to-the-meteorological-department-128625