Morning Headlines: ராகுல் காந்தி விவகாரம் முதல் மழை வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ..!
Morning Headlines July 10: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது. இதையடுத்து மேலும் படிக்க,
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதன் காரணமாக, 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் 12 ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளது என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் படிக்க,
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி மவுன சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் படிக்க,
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, சுகாதார பணியாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஞாயிறு விடுமுறை கூட ரத்து செய்யப்பட்டது. மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இது பதிவாகியுள்ளது. மேலும் படிக்க,
2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி 'பாகுபலி: தி பிகினிங்' படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர்.. இல்லை இல்லை..வாழ்ந்திருந்தனர் என சொல்லலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியானது என்றால் யாராலும் நம்ப முடியாது. மேலும் படிக்க,