Top 10 News: “பகல் கனவு காணும் விஜய்” , பாஜகவால் தர முடியுமா? அமைச்சர் பிடிஆர் ஆவேசம்- டாப் 10 செய்திகள்
TOP 10 News March 4th: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழிசைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
“என் பிறந்தநாளுக்கு சகோதரி தமிழிசை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். எனக்கு தெலுங்கு தெரியாது. தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார். இதிலிருந்தே, 3வதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால், அதனை புரிந்துகொண்டு பயன்படுத்த முடியும் என்ற திராவிட இயக்க கொள்கையை தமிழிசை உறுதிப்படுத்தியுள்ளார் - ஸ்டாலின்
இருமொழிக்கொளை தான் தொடரும் - பிடிஆர்
”உத்தரப்பிரதேச, பீகார் மாநிலங்களில் எத்தனை மாணவர்களுக்கு மும்மொழி தெரியும்? இருமொழிக் கொள்கையில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை விட, மும்மொழிக் கொள்கையில் படிக்கும் பிற மாநில மாணவர்கள் முன்னேற்றம் அடைந்ததற்கான தரவுகள் ஏதேனும் உள்ளதா?தமிழ்நாடு இருமொழி கொள்கையைதான் பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சரியான இந்த கொள்கையால் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேறியுள்ளனர் - அமைச்சர் பிடிஆர்
பகல் கனவு காண்கிறார் விஜய் - ஜெயக்குமார்
"2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சித் தொடண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார். எம்.ஜி.ஆர்-உடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய், எம்.ஜி.ஆர் ஆக முடியாது" - ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்
இந்தியர்களால் AI உதவியை நாடும் கால் சென்டர் நிறுவனம்!
இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை (INDIAN ACCENT) மறைப்பதற்காகவே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது Teleperformance! இத்தொழில்நுட்பம் ஊழியர்களின் ஆங்கில உச்சரிப்பை வாடிக்கையாளர்களுக்கு புரியும் வகையில் கொண்டுசேர்க்கிறது. சில சமயங்களில் இந்தியர்கள் பேசுவது அவர்களுக்கு புரியாமல் சிரமப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பூனை உயிரிழந்ததை ஏற்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
உத்தரப் பிரதேசம்: அம்ரோஹா பகுதியில் தனது வளர்ப்பு பூனை இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் 2 நாட்களாக அதன் உடலை தன்னுடனே வைத்திருந்த பெண், மூன்றாவது நாளில் தூக்கிட்டு தற்கொலை. விவாகரத்துப் பெற்று தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் தனிமையை போக்கியதால் பூனை மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அதனால் அது உயிருடன் வந்துவிடும் என நம்பியே 2 நாட்களை கழித்ததாக போலீசார் தகவல்
“ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” -காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
”கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின்மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, பெங்களூரு சர்வதேச திரைப்பட |விழாவுக்கு வர மறுத்துள்ளார். 10-12 முறை நேரில் சென்று |அழைப்பு விடுத்தும் மதிக்கவில்லை. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அவர், இந்த மாநிலத்தையே அவமதிக்கிறார். ராஷ்மிகாவுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.." - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிகுமார் கடா சர்ச்சை
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு! போர் நிறுத்தம் குறித்து நல்ல முடிவு ஏற்படும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம். அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடந்தவாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, உக்ரைனுக்கான உதவிகளை நிறுதியுள்ளது
ஒரு கிலோ தங்க வாணலியில் சமையல்!
சீனா: 1 கிலோ தங்கத்தால் ஆன பாத்திரத்தில் பெண் ஒருவர் சமைக்கும் வீடியோ வைரல்! விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாத்திரத்தின் விலை ₹84 லட்சமாக நிர்ணயம். இந்த பாத்திரத்தால் உணவின் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்
ஆப்கனில் மீண்டும் செயல்பட தொடங்கிய தொலைக்காட்சி நிலையம்!
சர்வதேச உறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது தாலிபன் அரசு. சமீபத்தில் பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. 2021ல் ஆட்சியை கைப்பற்றிய தாலிபன்கள் விதித்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

