Thiruvannamalai: பெளர்ணமி; திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள்! பக்தர்களுக்காக நாளை ஏற்பாடு!
பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை பக்தர்களின் வசதிக்காக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மாசிமகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரமே மாசிமகாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் இன்று கொண்டாடப்பட்டாலும், பெளர்ணமி நாளையே வருகிறது.
பெளர்ணமி:
பொதுவாக திருவண்ணாமலையில் பெளர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் சிவபெருமானை தரிசிப்பதற்காக அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். மேலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
350 பேருந்துகள்:
மாசிமகத்தில் வரும் பெளர்ணமி என்பதால் இந்த பெளர்ணமிக்கு பக்தர்கள் வழக்கத்தை அதிகளவு கிரிவலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து நாளை வழக்கமாக திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்துகளை காட்டிலும் 350 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு பிற மாவட்டங்களுக்கு 616 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், மாசிமகம் நன்னாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் வழக்கமாகவே கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த நிலையில், நாளை பெளர்ணமி என்பதால் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 350 பேருந்துகள் இயக்கப்படும் என்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
கிரிவலப் பாதையில் குவியும் பக்தர்கள்:
பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவு கிரிவலம் வருவார்கள் என்பதால் போதியளவு பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்காகவும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு பெரும்பாலும் திருவண்ணாமலைக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு நாளை வழக்கமாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகளுடன், அதிகளவு ஏசி பேருந்துகள், சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் கட்டணமும் அதிகாரிகளால் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

