மேலும் அறிய

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருதானது பிரதமர் மோடிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது. மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், இந்த விருதினை வழங்கி கெளரவபடுத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் என்ற விருதினை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இந்தியாவிற்கும் மொரிஷியஸுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் பிரதமர் மோடியையே சாரும். பிரதமர் மோடி பெறும் 21ஆவது சர்வதேச விருது இதுவாகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை கீழே காண்போம்.

கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ:

பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.

கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி:

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பலாவ் குடியரசின் எபகல் விருது:

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட ​​பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார். 

ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ:

கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது.

அமெரிக்க அரசு வழங்கிய லெஜியன் ஆஃப் தி மெரிட்:

சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்:

பஹ்ரைன் அரசால் வழங்கப்படும் உயரிய விருது. கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்:

வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவுகள் அரசால் வழங்கப்படும் உயரிய விருது.

ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது:

ரஷிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான இது, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆர்டர் ஆஃப் சயீத் விருது:

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் உயரிய விருதான இது, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது:

வெளிநாட்டு தலைவர்களுக்கு பாலஸ்தீனம் வழங்கும் உயரிய விருது, கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget