மேலும் அறிய

NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?

NCET 2025: என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு மைய விவரம் வெளியிடப்படும்.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்து இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேசிய, மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், என்ஐடிகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில், இரட்டை மேஜர் படிப்புகள், குறிப்பாக பள்ளி அளவிலான கல்வி மற்றும் குறிப்பிட்ட துறைசார் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எங்கே?

தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்ஐடி திருச்சியில், பி.ஏ., பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பொது நுழைவுத் தேர்வு

இவற்றில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு (National Common Entrance Test - NCET) நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 13 வகையான மொழிகளில் 178 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி முறையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்து இருந்தது. மார்ச் 18 – 19ஆம் தேதிகளில் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு மைய விவரம் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு தேர்வுக்கு 3, 4 நாட்கள் முன்னதாக வெளியாகும். என்சிஇடி தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை, தேர்வு மைய விவரங்கள், வினாத்தாள், இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த முழு தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/images/public-notice-for-inviting-online-application-of-ncet-2025-dated-20-feb-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/ 

தொலைபேசி எண் - 011-4075 9000

இ மெயில் முகவரி - ncet@nta.ac.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
Embed widget