Kanchipuram: சாதித்து காட்டிய காஞ்சிபுரம்.. இரண்டாம் பிடித்து சாதனை.. வாயை பிளக்கும் சென்னை...!
Kanchipuram News: காஞ்சிபுரம் மாவட்டம் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாட்டு அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் தனிநபர் வருமானத்தில், காஞ்சிபுரம் இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ஏராளமான வேலைவாய்ப்பு காரணமாக தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் Kanchipuram District
சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. அதிகளவு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் மாவட்டம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் அதிக அளவு வேலை வாய்ப்பு இருப்பதால், வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட காஞ்சிபுரம் அதிக உயர் மின் அழுத்த, இணைப்பு பெறுவதில் முதன்மை மாவட்டமாக உருவெடுத்து வருகிறது.
திட்டக்குழு பொருளாதார ஆய்வு அறிக்கை
தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டு இருந்த மாநில திட்ட குழு தனது தமிழக பொருளாதார ஆய்வு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் இடம் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொருளாதார விபரங்கள் இடம் பெற்று இருந்தன.
நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு
இந்த பொருளாதார அறிக்கையில், தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முதல் முறையாக, மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வடக்கு மண்டலத்தில் ஒன்பது மாவட்டங்கள் இடம்பெற்று இருந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை வடக்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு இருந்தது.
வடக்கு மண்டலத்தில் கடந்த ஆண்டு ஒட்டுமட்ட உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய் என அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிநபர் வருமானத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 38 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களை வடக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்கள் பிடித்த அசத்தியிருந்தன.
இரண்டாம் இடம் பிடித்த காஞ்சிபுரம்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் தனிநபர் வருமானத்தில் 6,47,474 பிடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. முதலிடத்தை செங்கல்பட்டு மாவட்டமும், மூன்றாவது இடத்தை சென்னை மாவட்டமும் பிடித்துள்ளது.
இரண்டாம் இடம் பிடிக்க காரணம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிப்காட், ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதேபோன்று குவாரிகள், சுற்றுலா, விவசாயம் என ஏராளமான பொருளாதார வாய்ப்புகள் காஞ்சிபுரத்தில் குவிந்து இருக்கின்றன. புதிய தொழில் முனைவர்கள் உருவாக்கப்பட்டு வருவதால், அதன் மூலமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு தொழில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
தொடர்ந்து வேலைவாய்ப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டம் தனது தனிநபர் வருமானத்தில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் இது, மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 5 லட்சத்து 19 ஆயிரத்து 941 ரூபாய் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

