புனித் ராஜ்குமாரை ஏன் கன்னட திரையுலகம் கொண்டாடுகிறது ?...என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று 50 ஆவது பிறந்தநாள். ஒட்டுமொத்த கன்னட திரையுலகமும் ரசிகர்களும் ஏன் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்கள் தெரியுமா ?

புனித் ராஜ்குமார் பிறந்தநாள்
2021 ஆம் அண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. அவர்கள் பெரிதும் மதித்த , கொண்டாடிய நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் , தயாரிப்பாளர் , பாடகர் , சமூக செயற்பாட்டாளர் என பல வகைகளில் மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்துள்ளார் புனித் ராஜ்குமார். இன்று அவரது 50 ஆவது பிறந்தநாள். இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கன்னட திரையுலகமும் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். ரசிகர்களால் செல்லமாக அப்பு என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார் இனிமேலும் கொண்டாடப்படுவார் என்பதை தெரிந்துகொள்ளலாம்
குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது
ஆறு மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே தனது தந்தையின் படங்களில் இடம்பெற்றுள்ளார் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக மொத்தம் 26 படங்களில் நடித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு வெளியான பெட்டடா ஹூவு படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் . இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார் புனித் ராஜ்குமார். தனது முதல் தேசிய விருதை வென்றபோது அவருக்கு வயது 10. அப்பு என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானதார் ரசிகர்களிடம் அதுவே அவரது செல்லப் பெயராக மாறியது.
ரசிகர்களின் மீது மதிப்பு
லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஸ்டாராக இருந்தபோதும் மிக எளிமையான மனிதராக இருந்தார் புனித் ராஜ்குமார். தனது ரசிகர்களிடம் எப்போதும் மரிதாயைகாக நடந்துகொண்டார். தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் திரையரங்கிற்கு சென்று ஒவ்வொரு ரசிகர்கரையும் சந்தித்து பேசியவர். கன்னடத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரசிகர்களால் தான் தான் ஒரு நடிகனாக இருப்பதாகவும் அவர்களின் அன்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக சேவை
சினிமா தவிர்த்து புனித் மக்களின் மனதில் நிலைத்திருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவரது சமூக செயற்பாடுகள். 26 ஆதரவற்றோர் காப்பகத்திற்கும் 14 முதியோர் இல்லத்திற்கு தொடர்ச்சியாக நிதியுதவி செய்து வந்திருக்கிறார். இது தவிர்த்து கன்னட மொழியில் பயிற்றுவிக்கு கல்விகளுக்கும் நிதியுதவி செய்தார். 1800 மாணவர்களை படிக்க வைத்தும் ஏழை குழந்தைகளுக்கு 45 பள்ளிகளையும் கட்டிக் கொடுத்துள்ளார். புனித் இவ்வளவு உதவிகளை செய்வது அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
பக்கா என்டர்டெயினர்
நடிப்பு மட்டுமில்லாமல் , நடனம் , பாடகர் என எல்லா விதங்களிலும் ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகராக திக்ழந்தார் புனித் ராஜ்குமார். இன்று கன்னடத்தில் வெளியாகும் ஒரு படமும் புனித் ராஜ்குமாரை நினைவு கூறாமல் தொடங்குவதில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதேபோல் ரசிகர்களாலும் கன்னட திரையுலகத்தாராலும் அவர் இப்படியே நினைவு கூறப்படுவார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

