மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! குஷியில் உயர்கல்வி மாணவர்கள் - அரசின் அதிரடி அறிவிப்பு என்ன?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
மாநில சொந்த வருவாய் - ரூ.7,441.40 கோடியும், இதில் ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினத்திற்காகவும், ரூ.1975.28 கோடி மூலதின செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ.3,432.18 கோடியும், மத்திய அரசின் சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ரூ.400 கோடி, ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
வாரந்தோறும் 3 நாள் முட்டை இனி வழங்கப்படும். 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில், புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
சட்டமன்றத்தில் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) பிரிவில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியை ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் வரும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோரை இழந்த மாணவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,000 அல்லது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் என்று கூறினார்.
பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்தின் கீழ் ரூ526.81 கோடியை அதிகரித்த பட்ஜெட்டில், 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வேலையில்லாத திருமணமாகாத SC/ST பெண்கள்/விதவைகளுக்கு, திருமணம் அல்லது வேலை கிடைக்கும் வரை, அரசாங்கம் மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் கூறினார்.
எஸ்சி/எஸ்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வி மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்காக அரசு மாதந்தோறும் 5,000 நிதியுதவி வழங்கும். தட்டச்சு/சுருக்கெழுத்து மற்றும் கணினி வகுப்புகளில் சேர எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு முறையே 500 மற்றும் 1,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

