மேலும் அறிய

TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...

TN Agri Budget 2025: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.? முழு விவரங்கள் இதோ...

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு

  • வேளாண் துறைக்கு மொத்தமாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.8,186 கோடி - உழவர்களின் இலவச மின் இணைப்புக்கான கட்டணத் தொகை ஒதுக்கீடு.
  • ரூ.2,000 கோடியில் 80,000 இயற்கை மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ரூ.1,427 கோடி - வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான நிதி ஒதுக்கீடு.
  • ரூ.1,168 கோடியில், 3 லட்சம் ஏக்கரில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்த நுண்ணீர்ப் பாசன திட்டம்.
  • ரூ.297 கோடி - கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கீடு.
  • ரூ.269 கோடியில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், 2,335  ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
  • ரூ.215.80 கோடி - விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு.
  • ரூ.160 கோடியில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்.
  • ரூ.108 கோடியில் எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்க 7.14 ஏக்கரில் 90,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம்.
  • ரூ.102 கோடியில், டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்.

  • சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு.ஒ
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50.79 கோடி.
  • விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ஹேக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.
  • 63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு, 1-லிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு.
  • மக்காச்சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் ரூ.40 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • ரூ.20 கோடியில் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
  • 2,925 கி.மீ நீள கால்வாய்களை தூர்வார ரூ.13.80 கோடி ஒதுக்கீடு.
  • 37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.11.74 கோடி.
  • ஏழை மகளிர் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.6 கோடியில் வேளாண் தர நிர்ணய ஆய்வகம் அமைக்கப்படும்.
  • 100 புதிய மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கவும், இருப்பவற்றை மேம்படுத்தவும் ரூ.2.75 கோடி.
  • அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத் தொகை 40%-த்திலிருந்து 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
"காதல் நாடகம்... வாடகை வீட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை!" - புதுச்சேரியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
Embed widget