Masters league cricket: சச்சின்-ராயுடு சம்பவம்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய மாஸ்டர்ஸ் சாம்பியன்..
Masters league cricket: இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17 பந்துகளமீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை ஆறு விக்கெட்டுகளை வித்தியாசத்தில் அடைந்து முதல் முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் அணி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி டாஸ் வென்று இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது.இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் விளையாடும் பிளேயிங் லெவனிலும் எந்த மாற்றமும் இல்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கத்தை அளித்தார். அதன் பின்னர் சுழற் பந்து ஷதாப் நதீம் நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விண்டீஸ் அணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர். வினய் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், விக்கெட்டுகள் சரிந்த போதிலும் லென்டில் சிம்மன்ஸ் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அணியை 148 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
𝙎𝙞𝙢𝙢𝙤𝙣𝙨' 𝙎𝙥𝙖𝙧𝙠 ✨🙌
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 16, 2025
Lendl Simmons scores a much needed half century for the #WestIndiesmasters! 👏
Watch the Grand Finale 👉 LIVE now on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! 📺📲#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/rgKOi53POY
இந்திய மாஸ்டர்ஸ் வெற்றி:
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கிச் சென்ற அம்பதி ராயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் நல்ல தொடக்க்கத்தை தந்தனர், முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சச்சின் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
𝐓𝐫𝐚𝐝𝐞𝐦𝐚𝐫𝐤 𝐓𝐞𝐧𝐝𝐮𝐥𝐤𝐚𝐫 Upper cut! 🤌
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 16, 2025
Watch the Grand Finale 👉 LIVE now on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! 📺📲#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/N7u94Tfp8h
ஆனால் நங்கூரம் போல் நின்று ஆடிய அம்பாத்தி ராயுடு 50 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17 பந்துகளமீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை ஆறு விக்கெட்டுகளை வித்தியாசத்தில் அடைந்து முதல் முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.





















