பாகுபலி 10 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்...திரையரங்கில் ரீரிலீஸ் எப்போது தெரியுமா
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் மீண்டும் வெளியாக இருக்கிறது

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் , தமன்னா , ரானா டகுபதி , அனுஷ்கா , நாசர் , ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோ நடிப்பில் உருவான படம் பாகுபலி. சரித்திர கற்பனை கதையாக உருவான இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஹாலிவுட்டில் வெளியாகும் வரலாற்றுப் படங்களை பார்த்து வியந்து வந்த இந்திய ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமாக பாகுபலி படம் அமைந்தது. இமாலைய பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான கதையும் கற்பனையை வைத்து உலகத்தரமான படத்தை உருவாக்கி காட்டினார் ராஜமெளலி. பாகுபலி முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் வசூல் சரி வசூல் ரீதையாக உலகளவில் சாதனைப் படைத்தன.
பாகுபலி ரீரிலீஸ்
வரும் ஜூலை மாதத்தோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாகுபலி திரைப்படம். இதனை முன்னிட்டு இந்த படத்தை ரீரிலீஸ் செய்யும்படி படக்குழுவினருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் பாகுபலி திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். வரும் மார்ச் 21 ஆம் தேதி பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இதனைத் தொடர்ந்து பாகுபலி படமும் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
மகேஷ் பாபு ராஜமெளலி காம்போ
இயக்குநர் ராஜமெளலி தற்போது மகேஷ் பாபுவுடன் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசாவில் நடந்து வருகிறது. சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மாபெரும் சாகசத் திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்கு பின் ராஜமெளி படங்களின் மீது இந்தியா தவித்து வெளிநாடுகளிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

