மேலும் அறிய

அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதற்காக கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா? அரசின் தோல்விக்கு  உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது என்று பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதற்காக கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போதிய வருவாயும், நிதியும் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், இணையக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய சுமையை அவற்றின் மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் பெரும்பான்மையான  பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பள்ளிகளிலும் அத்தகைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒருமுறைக் கட்டணம் செலுத்த  வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான ரூ.189.11 கோடியை பள்ளிக் கல்வித்துறை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ரூ.5.49 கோடியை   மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிக் கல்வித்துறை, மீதமுள்ள ரூ.183.62 கோடியை உள்ளாட்சி அமைப்புகள்தான்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. 

அடிப்படை வசதிகளைக்கூட செய்ய முடியாத நிலை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.  இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்க முடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது.  மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டதையடுத்து அந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது.

அரசியல் செய்வதில்தான் திமுக அரசு தீவிரம்

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.  அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மறுப்பதற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பக்கம்தான் நியாயம் உள்ளது.  உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் தமிழகத்திற்கான நிதி உடனடியாக கிடைத்து விடும். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும்  பெறுவதை விட , இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில்தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

ஒருங்கிணைந்தக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து பெறாதது தமிழக அரசின் தோல்வி. அதற்காக உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.  எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள்தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Embed widget