நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோய் பாதிப்பா...? திடீரென்று பிரேக் எடுத்தது ஏன் ?
நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் இந்த தகவலுக்கு மம்மூட்டியின் டீம் விளக்கமளித்துள்ளது

மம்மூட்டி
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் மம்மூட்டி. தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் , தளபதி , பேரன்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர்த்து இந்தியளவில் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 73 வயதை எட்டியுள்ள மம்மூட்டில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இதிலும் ஒவ்வொரு படத்தின்போதும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருவது பலரால் வியந்த் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தில் நடித்தார். தற்போது மகேஷ் நாராயாணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது வந்த நிலையில் நடிகர் மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்துள்ளது அவரது உடல் நலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது
மம்மூட்டிக்கு புற்றுநோயா
படப்பிடிப்பு நின்றதற்கு காரணம் என்ன என தெரிவதற்குள் மம்மூட்டிக்கு புற்று நோய் பாதிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. இதன் தீவிரம் அறிந்து மம்மூட்டியின் குழு உடனடியாக விளக்கமளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால் மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்த் பிரேக் எடுத்துள்ளதாகவும் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று மம்மூட்டியின் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Isn’t it crazy how insensitive social media has gotten? No one seems to care if the news is actually true or not. I really hope Mammookka is doing okay. But seriously, if he’s not, let’s not spread any negativity about his health.#Mammootty pic.twitter.com/FZwJ9awYT8
— Sreenath Nandipulam (@moviesandsree) March 17, 2025
மம்மூட்டிக்கு புற்றுநோய் என்கிற தகவல் முற்றிலும் பொய் என்றும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் இந்த தகவலை நம்பத் தேவையில்லை என்றும் அவரது பி.ஆர் குழு தெரிவித்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

