Ravichandran Ashwin: தோனியை கூப்பிட்டு பார்த்தேன்! ஆனா இப்படி பண்ணுவாருனு எதிர்ப்பார்க்கல.. போட்டுடைத்த அஸ்வின்
Ravichandran ashwin: 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய அஸ்வின், 2015 சீசனுக்குப் பிறகு முதல் முறையாக 5 முறை சாம்பியனான சென்னை அணிக்குத் திரும்பினார்.

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் , பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம என்று முடிவு செய்ததாக அஸ்வின் தெரிவித்தார்.
100 வது டெஸ்ட்:
அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒரு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தது, அங்கு அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், தோனியின் கைகளிலிருந்து அந்த நினைவுப் பரிசை அஸ்வின் பெற விரும்பினார், துரதிர்ஷ்டவசமாக அவரால் அங்கு வர முடியவில்லை.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்வின் போது, தனது 100வது டெஸ்டில் தோனியிடமிருந்து விரும்பிய பரிசு கிடைக்கவில்லை என்றாலும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் ஒப்பந்தம் செய்து, அதைவிட சிறந்த பரிசு கிடைத்ததாக அஸ்வின் தெரிவித்தார்.
தோனி கொடுத்த பரிசு:
தோனியை தனது 100வது டெஸ்டில் வந்து கலந்துக்கொள்ளுமாறு கூறினேன், அப்போது அவரால் அங்கு வரமுடியவில்லை என்றார், மேலும் பேசிய அவர் "தர்மசாலாவில் எனது 100வது டெஸ்டுக்கு நினைவுப் பரிசை வழங்குவதற்காக எம்.எஸ். தோனியை அழைத்தேன். அதை எனது கடைசி டெஸ்டாக மாற்ற விரும்பினேன். ஆனால் அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், என்னை மீண்டும் சி.எஸ்.கே.வுக்கு அழைத்துச் செல்லும் பரிசை அவர் எனக்கு வழங்குவார் என்று நான் நினைக்கவில்லை. இது மிகவும் சிறந்தது. எனவே, எம்.எஸ்., அதைச் செய்ததற்கு நன்றி. நான் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது அஸ்வின் கூறினார்.
"I called Dhoni for my 100th Test. I invited him to hand over memento in Dharamshala. I wanted to make that my last Test, but he couldn’t make it. What I didn’t expect was that he would give me an even better gift — bringing me back to CSK.” @ashwinravi99 #CSK #chennaisuperkings pic.twitter.com/IWJXJa0eqC
— Santhosh Kumar (@giffy6ty) March 16, 2025
"மிக முக்கியமாக, நான் சிஎஸ்கேவுக்கு திரும்பி வந்திருப்பது, இவ்வளவு சாதித்த ஒருவராக அல்ல, மாறாக முழு வட்டத்தையும் கடந்து இங்கு திரும்பி வந்து முன்பு போலவே அனுபவிக்க விரும்பும் ஒருவராக. இது ஒரு அற்புதமான இடம்," என்றார்
2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய அஸ்வின், 2015 சீசனுக்குப் பிறகு முதல் முறையாக 5 முறை சாம்பியனான சென்னை அணிக்குத் திரும்பினார். கடந்த பத்தாண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காக அஸ்வின் விளையாடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

