WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final MI Vs DC: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

WPL 2025 Final MI Vs DC: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வி கண்டுள்ளது.
மும்பை அணி சாம்பியன்:
மகளிர் ப்ரீமியர் லீக் றுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் லீக் வரலாற்றில் பல முறை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றூள்ளது. கடந்த சீசனிலும் மும்பை அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினாலும், RCB அணியிடம் தோல்வியடைந்தது. ஆனால் இந்த முறை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை அணி அசத்தியது.
தொடரும் டெல்லியின் சோகம்:
மறுமுனையில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு இது ஒரு மோசமான தோல்வியாகும். காரணம் அந்த அணி தொடர்ந்து 3வது முறையாக WPL இறுதிப் போட்டிக்கு நுழைந்தும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக மூன்று முறையும் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் இறுதிப்போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளது. அதில் இரண்டு முறை மும்பை அணியிடம் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் லீக் போட்டியில் மோதிய இரண்டு முறையும், டெல்லி அணி மும்பையை வீழ்த்தி இருந்தது. ஆனால், இறுதிப்போட்டியில் மீண்டும் வெற்றி பெற முடியாமல் கோப்பையை இழந்துள்ளது.
#TATAWPL 2025, you have been incredible 🙌
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
📸📸 We leave you with the 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 of this edition- 𝐌𝐮𝐦𝐛𝐚𝐢 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧𝐬 🏆#DCvMI | #Final | @mipaltan pic.twitter.com/yyyfVVAog3
ஸ்கோர் விவரம்:
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹர்மன்ப்ரீத் கவுரின் 66 ரன்களாலும், நாட் ஸ்கைவர்-பிரண்டின் 30 ரன்களாலும் அந்த அண் 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மரிசான் காம்ப் மற்றும் நிகி பிரசாத் ஆகியோரின் கடைசி நேரத்தில் போராடினாலும், 20 ஓவர்கள் முடிவ்ல் அந்த அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி இரண்டாவது முறையாக கோப்பயை கைப்பற்றியது. அபாரமாக பந்துவீசிய நாட் ஸ்கைவர் 3 விக்கெட்டுகளையும், அமிலிய கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்நாயகி விருது
மும்பை அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் போட்டி முழுவதும் 523 ரன்கள் எடுத்து, ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும் அவரது செயல்பாட்டால் போட்டியின் சிறந்த வீராங்கனை என்ற விருதையும் வென்றார். இறுதிப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த, மும்பை அணி கேப்டன் ஹர்மன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

