மேலும் அறிய

James Dyson Award 2025: மாணவர்களே.. சர்வதேச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- ரூ.31 லட்சம் பரிசு- விவரம்!

James Dyson Award 2025 Registration: உலகளாவிய வெற்றியாளருக்கு சுமார் ரூ.31 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பில், பரிசு வழங்கப்படும்.

James Dyson Award 2025: 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான ஜேம்ஸ் டைசன் விருதுக்கு பொறியியல் மற்றும் வடிவமைப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத் தொகை ரூ.30 லட்சம் ஆகும்.

இதுகுறித்து விருது அமைப்பு கூறும்போது, "ஜேம்ஸ் டைசன் விருது ஒரு கண்டுபிடிப்பாளராக உங்களுக்கான பெயரை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். இதன்மூலம் குறிப்பிடத்தக்க பணப் பரிசை வெல்வதோடு, உங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்கலாம், உங்கள் சகாக்களின் மதிப்பைப் பெறலாம். மேலும் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைப் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம், ஏன் விண்ணப்பிக்கலாம்?

உலகின் மிக முக்கியமான சவால்களை நிவர்த்தி செய்யும் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்ட புதுமையான, சிக்கல் தீர்க்கும் யோசனைகளை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பரிசு?

உலகளாவிய வெற்றியாளருக்கு (Global winners) சுமார் ரூ.31 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்.

அதேபோல தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பில், பரிசு வழங்கப்படும்.

இந்த விருதுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேசிய வெற்றி பெறுவோரின் விவரங்கள் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும். சர்வதேச அளவிலான வெற்றியாளர்களின் விவரங்கள் நவம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க என்ன தகுதி? (James Dyson Award 2025: Eligibility Requirements)

பொறியியல், பொருள் வடிவமைப்பு மற்றும் தொழிற்சாலை வடிவமைப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள், இந்த பாடங்களை முடித்த பட்டதாரிகள்.

பொறியியல் அல்லது வடிவமைப்பில் பட்டப்படிப்பு நிலை பயிற்சி பெற்றவர்கள் (தற்போதைய அல்லது கடந்த நான்கு ஆண்டுகளுக்குள்)- Degree-level apprentices.

எந்த நாடுகளில் எல்லாம் கலந்துகொள்ளலாம்?

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, சீனா, ஹாங்காங், தைவான் (சீனா), பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு வெற்றி பெற்றது யார்?

கடந்த ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதை, இந்திய மாணவர் வென்றார். ஒடிசாவைச் சேர்ந்த கோமல் பாண்டா என்னும் மாணவர் எடுத்துச் செல்லக்கூடிய இன்சுலின் குளிர்விப்பானைக் (portable insulin cooler) கண்டுபிடித்ததற்காக இந்த விருதைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget