மேலும் அறிய
Advertisement
Today Headlines : தமிழக அமைச்சரவை ஆலோசனை.! சசிகலாவிடம் விசாரணை செய்ய பரிந்துரை..! வங்காளதேசம்- ஆப்கன் மோதல்..! இன்னும் பல
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- பேரவையில் அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைகளை சமர்ப்பிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் விரிவான விவாதம்
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரை
- தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்பட 21 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் முடிவு
- கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பிற்கு பாலியல் வன்கொடுமையோ, கொலையோ காரணம் அல்ல – ஜிப்மர் மருத்துவமனை அறிக்கைப்படி உறுதி செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தகவல்
- மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டல்
- கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை – தமிழ்நாடு முழுவதும் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- ஓசூரில் வெள்ளத்தில் சிக்கிய கார் – தீயணைப்பு வீரர்களின் உதவியால் 4 பேர் பத்திரமாக மீட்பு
- முகச்சிதைவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமியை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- வேளாங்கண்ணி புனித பேராலய திருவிழா தொடக்கம் – லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
இந்தியா :
- தற்கொலை, சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது – தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் அதிர்ச்சி தகவல்
- டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு
- டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக கோரி டெல்லி சட்டசபையில் பா.ஜ.க. அமளி
- கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்
உலகம் :
- நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியது நாசா
- எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது நாசாவின் திட்டம்
- பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் தொடர்ந்து அவதி
விளையாட்டு :
- அமெரிக்க ஓபன் டென்னிசில் முதல்நிலை வீரர் மெத்வதேவ், முன்னணி வீரர் முர்ரே அடுத்த சுற்றுகளுக்கு முன்னேற்றம்
- ஆசிய கோப்பை கிரிக்கெட் ஷார்ஜா மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion