அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு அமைச்சர் துரைமுருகனை சந்தித்து நலம் விசாரிக்க இருக்கின்றனர்.
திமுக அமைச்சர்களின் மூத்த அமைச்சர் துரைமுருகன். இவருக்கு வயது 86. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த துரைமுருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு சளி, மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்றைக்குள் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

