Breaking LIVE: மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 16 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையத்தில் பதியலாம். தனித்தேர்வர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதேபோல், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்ற மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. தட்கல் முறையில் 10 ம் வகுப்புக்கு ரூ. 500, 11 மற்றும் 12 ம் வகுப்புக்கு தேர்வு கட்டணத்துடன் ரூ. 1000 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி
மதுரை மேலூர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 8பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் தாயாருக்கு சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு
ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் முதல் வாரத்தில் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..
சென்செக்ஸ் 1,000, நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1,063 புள்ளிகள் உயர்ந்து 54, 487 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.