திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
கல்வியாளர் அணிக்குத் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக தமிழிசை தங்கபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தி.மு.க. கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கல்வியாளர்கள் அணிக்குத் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக தமிழிசை தங்கபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல மாற்றுத் திறனாளிகள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திமுக மாற்றுத் திறனாளிகள் அணியின் தலைவராக தங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்!
— DMK (@arivalayam) June 23, 2025
- தலைமைக் கழக அறிவிப்பு#DMK4TN pic.twitter.com/0KVfAupnaS
மாநிலக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு
இந்த கல்வியாளர்கள் குழு மாநிலக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களில் காத்திரமாகக் களமாடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதிகள்
அதேபோல, திமுக பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசுப் பணி, தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த விவகாரத்தை கல்வியாளர் அணி எப்படி கையாளும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.






















