Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
பவன் கல்யாண் பாதுகாவலர் செய்த செயல் தமிழிசை சற்றென்று முகம் மாறிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் மதுரை வருகை தந்தார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் . அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் பயணிகள் வருகை இடத்தில் பவன் கல்யாண் தமிழிசை சௌந்தர்ராஜன் சேர்ந்து வரும்போது பவன் கல்யாண் z பிரிவு பாதுகாவலர் ஒருவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தள்ளிவிட்டு முன்னே சென்றார்.
உடனே சற்று முகம் மாறிய தமிழிசை சௌந்தரராஜன் பாதுகாவலர் பார்த்து ஏன் என்பது போல் கையசைத்தார். உடனே பவன் கல்யாண் தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் அழைத்தார் பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களுக்கு கை அசத்தப்படியே காரில் ஏறி தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்க சென்றனர்.
முன்னதாக தமிழிசையை பவன் கல்யாண் பாதுகாவலர் தள்ளிவிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





















