TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
ஜனநாயகன் திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில், ஜன நாயகன் தனது கடைசி படமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும் என விஜய் கூறியதாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், அணி நிர்வாகிகள் நியமனம் என்று கட்சிப்பணிகளை தீவிரபடுத்தியுள்ளார். அதேபோல், திமுக மற்றும் அதிமுக இப்போதே கூட்டணியை உறுதிசெய்துவிட்டது ஆனால் விஜய் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போகிறாரா? இல்லை கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத சூழலில் அவர் களத்திற்கு வந்து அவர் மக்களை எப்போது சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த நிலையில் தான் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். ஜன நாயகன் திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ இது தொடர்பாக பேசியுள்ளார். அதில், விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார்.
விஜய் சார் சூப்பர் கூல். எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்.நான் விஜய் சாரிடம், 'இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அது தெரியும் என்றார்” எனக்கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மீண்டும் ஒரு கமலா விஜய் என்ற நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.





















