NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கப்பட்டதால் திமுகவினர் மைக்கை பிடிங்கி வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இந்த நிலையில் அங்கிருந்த திமுகவினர் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேடை ஏறி மைக்கை பிடுங்கி பேசவிடாமல் தடுத்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனால் அப்பகுதியில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் மைக்கை பிடிங்கிய ரகலையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு கிளப்பியுள்ளது.





















