டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜெகன் மோகனின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 18ம் தேதி ரெண்டபல்லா கிராமத்திற்கு சென்றிருந்தார். ஓராண்டிற்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்றார். வழிநெடுகிலும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டியை பூ தூவி வரவேற்பதற்காக வந்த 65 முதியவர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். அப்போது அவரது கான்வாய் முதியவரின் கழுத்தில் ஏறியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள், ட்ரோன் காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் ஜெகன் மோகன் ரெட்டியின் காரில் சிக்கி தான் முதியவர் உயிரிழந்ததை போலீசார் உறுதிசெய்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த முதியவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், ஜெகன் மோகன் ரெட்டியை குற்றவாளியாக சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ட்ரைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















