Breaking LIVE:ஏப்ரல் 30, 2020-க்கு பிறகு கொரோனா மரண எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவானது இன்று
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
தற்போதைய 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அதே போல, அசாம், பீகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேலான பகுதிகளில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் கைவசம் சத்திஸ்கர் மாநிலம் மட்டுமே தனித்து ஆட்சியில் இருக்கிறது. பிற மாநிலங்களான ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைத்துள்ளது.
ஏப்ரல் 30, 2020-க்கு பிறகு கொரோனா மரணம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவானது இன்று
சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை
சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை
விளிம்புநிலை மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளியுங்கள் - ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024-இல் இணைந்து போட்டி - மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024-இல் மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் - மம்தா பானர்ஜி
330 மனநோயாளிகள் சிகிச்சை எடுத்துவந்த உக்ரைன் மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.
330 மனநோயாளிகள் சிகிச்சை எடுத்துவந்த உக்ரைன் மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.
ஏறுமுகத்தில் எண்ணெய் விலை: சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் பாதிப்பு
ஏறுமுகத்தில் எண்ணெய் விலை: சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் பாதிப்பு. 80% சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. போர் சூழலால் இப்போது இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது