மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய சம்பவங்கள் இன்றைய நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
- சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிறைவடையும் - அமைச்சர் கே.என். நேரு உறுதி
- காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை
- தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
- முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் விரர் பிரக்ஞானந்தா - அரசு தரப்பில் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு
- திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் - ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்
- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இரவில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை - வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது
- தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை தயார் - செப்டம்பர் மாதம் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்படும் என தகவல்
இந்தியா:
- வடமாநிலங்களில் தெரிந்த சூப்பர் ப்ளூ மூன் - ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
- மும்பையில் இன்று நடைபெறுகிறது எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் - மேலும் இரண்டு கட்சிகள் இணைய உள்ளதாக தகவல்
- எதிர்க்கட்சிகளே கனவு காணுங்கள் - டெர்மினருக்கே எப்போதும் வெற்றி என மோடி படத்துடன் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவு
- ஆதித்யா எல்1 விண்கலத்திற்கான ஒத்திகை பணிகள் அனைத்தும் முடிந்தது - விண்ணில் பாய தயார் என இஸ்ரோ தகவல்
- நிலவை ஆய்வு செய்துகொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர் - புகைப்படம் இணையத்தில் வைரல்
- டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- கர்நாடகாவில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் - ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்
உலகம்:
- சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை - அமெரிக்க ராணுவம் குவிப்பு
- உக்ரைன் டிரோன் தாக்குதலில் 4 நகரங்கள் , போர் விமானங்கள் சேதம் - ரஷ்யா பதிலடி
- அமெரிக்க உயிரியல் பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்
- அமெரிக்காவை ஜோ பைடன் 3ம் உலகப்போரை நோக்கி அழைத்துச் செல்வார் - முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்
- வினோத திருவிழாவால் சிவப்பாக மாறிய ஸ்பெயினின் புனோல் நகரம் - ஒருவரை ஒருவர் தக்காளியால் அடித்துக்கொண்டு உற்சாகம்
- காபோன் நாட்டில் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவு - ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது
விளையாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை
- ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளத்தை விழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி - இன்றைய போட்டியில் இலங்கை - வங்கதேசம் மோதல்
- தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
- டைமண்ட் லீக் தடகள போட்டி - உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய வீரர் நிரஜ் சோப்ரா பங்கேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion