மேலும் அறிய
7 AM Headlines: நடப்பு நிகழ்வுகள் என்னவென்று அறிய வேண்டுமா..? காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்
- மாணவர்களின் நலனுக்கான அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர்கள் நலனை காக்கும் வகையில் ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
- "திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" - அன்புமணி ராமதாஸ்
- திருவண்ணாமலை: மின்சார துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்ற போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
- ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்த பெயருக்குள் உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வந்தது.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
- பால் தட்டுப்பாட்டை போக்க நேற்று முதல் ( மார்ச் 1 ஆம் தேதி) Cow Milk என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இந்தியா:
- கொரோனாவிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டணச் சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.
- திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
- கான்பூரில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- பிப்ரவரி 18ஆம் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டர் கொள்கைக்கு முடிவு கட்டப்படும் - மல்லிகார்ஜூன கார்கே
- முக ஸ்டாலினின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை - பரூக் அப்துல்லா பேச்சு
- நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் - பிரதமர் மோடி கருத்து
- மாற்று சக்தியை உருவாக்க இந்தியாவே முக ஸ்டாலினை எதிர்பார்த்து காத்திருக்கிறது - பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பேச்சு
- பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி - 12 சதவீதம் அதிகரிப்பு
விளையாட்டு:
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
- மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார்.
- ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- தைவானை நோக்கி 25 போர் விமானங்களை சீனா அனுப்பியதால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
- ஈரானில் விஷம் கொடுக்கப்பட்ட 37 பள்ளி மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion