(Source: ECI/ABP News/ABP Majha)
இந்தி வழி கல்வி குறித்து மற்ற மாநில முதலமைச்சர்களை சந்திப்பேன் - மத்திய பிரதேச முதலமைச்சர் பேச்சு!
இந்தியில் மருத்துவக் கல்வி நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தியில் மருத்துவக் கல்வி நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Hindi version of MBBS:
நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ படிப்புகளை ஹிந்தியில் கற்பிக்க, ஹிந்திக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தங்களை மத்திய உள்துறை அமித் ஷா மத்திய பிரதேசத்தில் வெளியிட்டார். போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிந்திக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.
இது தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan ) கூறுகையில், ஆங்கிலம் மொழி இல்லாத கல்வியை கொடுக்க நினைக்கிறோம். அதன் முன்னெடுப்புதான் மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மருத்துவம் படிக்க விரும்புவர்களும் படிக்கலாம். இந்தியில்தான் பயில வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், “ நாம் ஏன் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும்; ஜப்பான், ஜெர்மன், ரஷ்யா நாட்டினர் அவர்களது தாய்மொழியில்தான் படிக்கிறார்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்; நாம் ஏன் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும்? நம் பிள்ளைகளும் தாய்மொழியை பின்பற்றினால் நல்லது இல்லையா? என்று கேட்டார்.
MP | We will share the (Hindi medical education) books that we have prepared, with other states. I'll meet with CMs of all states regarding this. Whatever we've, we will give to others & if they (other states) do well in anything, we will take from them: CM Shivraj Singh Chouhan pic.twitter.com/ZDEIPBYs2A
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 16, 2022
தற்போது இந்தி மொழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவ புத்தகங்களால் பலரும் பயனடைவர்; ஆங்கிலம் வழி கல்வியில் பயின்றிடாதாவர்களுக்கு இந்தி வழியில் மருத்தும் மிகவும் உதவும் என்று சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், ஆங்கில வழி கல்வி பயின்றிராத மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக வேதனை தெரிவித்திருந்தனர். ஆனால், இனி அப்படியான நிலை இருக்காது. என்றும் அவர் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களுக்கு நாங்கள் உருவாக்கிய இந்தி மொழியில் உள்ள மருத்துவ புத்தகங்களை வழங்குவேன் என்று சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவராஜ் சவுகான் கூறுகையில், நான் மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களை நேரில் சந்தித்து அவர்களிடமும் இந்தி வழியில் மருத்துவ படிப்புகளை நடத்தக் கோரி கூறுவேன்.” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள முதலாம் ஆண்டுக்கான மூன்று புத்தகங்களான அனாடமி, பிசியாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி ஆகிய புத்தகங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.