Nawaz Sharif: கார்கில் போரில் ஒப்பந்தத்தை மீறியது நாங்கதான் - உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
Nawaz Sharif On Kargil War: கார்கில் போரின்போது பாகிஸ்தான் லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
Nawaz Sharif On Kargil War: ராணுவத்தால் தான் இம்ரான் கான் பிரதமர் பதவியை பெற்றதாகவும், நவாஸ் ஷெரிப்ஃ சாடியுள்ளார்.
ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் - நவாஸ் ஷெரிஃப்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப், இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் சேர்ந்துதான் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை, 1999ஆம் ஆண்டு இஸ்லாமாபாத் மீறியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கார்கிலில் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற பொதுக்குழுவில் ஷெரிஃப் உரையாற்றினார்.
அப்போது, "மே 28, 1998 அன்று, பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன் பிறகு வாஜ்பாய் இங்கு வந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம்”என தெரிவித்துள்ளார்.
லாகூர் ஒப்பந்தம் என்றால் என்ன?
நவாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் பிப்ரவரி 21, 1999 அன்று லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பற்றிய தொலைநோக்குப் பார்வையைப் பற்றி பேசும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளில் பெரும் முன்னேற்றத்தைக் குறித்தது. இருப்பினும், ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயேகு, ஜம்மு & காஷ்மீரில் உள்ள கார்கிலில் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியால் கார்கிலில் இருநாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.
அந்த போர் நடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது என்ற உண்மையை நவாஸ் ஷெரிஃப் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் - நவாஸ் ஷெரீப்:
பாகிஸ்தானின் முதல் அணுகுண்டு சோதனையின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது, நவாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நாங்கள் அணுகுண்டு சோதனை நடத்துவதைத் தடுக்க எனக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க முன்வந்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். [பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்] இம்ரான் கான் போன்ற ஒருவர் அப்போது பதவியில் இருந்திருந்தால், அவர் கிளிண்டனின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பார் என சாடியுள்ளார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவரான நவாஸ்:
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு PML-N இன் தலைவராக நவாச் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட பொய் வழக்கால், தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இனி கட்சியை வலுப்படுத்த பாடுபடுவேன் என்றும் நவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இம்ரான் கான் ஐஎஸ்ஐயால் அதிகாரத்திற்குத் கொண்டு வரப்பட்டார் என்ற உண்மையை அவரால் மறுக்க முடியுமா என சவால் விடுகிறேன். எங்களை இராணுவம் ஆதரிப்பதாக குற்றம் சாட்ட வேண்டாம் என்றும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பைக் ஆட்சிக்கு கொண்டுவருவது பற்றி ஐஎஸை பேசியதா என்பதை வெளியிடுமாறும் இம்ரானை கேட்டுக்கொள்கிறேன்” என நவாஸ் தெரிவித்துள்ளார்.