மேலும் அறிய

Video : விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் - தொடரும் சர்ச்சை!

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பல விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. அதே வேளையில் ரத்தும் செய்யப்படுகின்றனர். இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  நேற்று கூட, இண்டிகோ விமானம் புறப்பட பல மணி நேரம் தாமதம் ஆனதால், பயணி ஒருவர் விமானப் பணியாளரை தாக்கி இருக்கிறார். 

மும்பையில் தரையிறங்கிய விமானம்:

இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதாவது, கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ (6E 2195) விமானம் பனிமூட்டம் காரணமாக மும்பை சத்ரபஜி சிவாஜி மகாரஜ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில், ஓடுதளத்துக்கு (விமானங்கள் நிறுத்தும் இடம்) அருகில் பயணிகள் அமர்ந்துள்ளனர். அங்கு இருந்தபடியே பயணிகள் இரவு உணவும் உட்கொண்டனர்.  இதை பார்த்ததும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால், பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பும் கேட்டனர்.

நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு:

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் கூறுகையில், "வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. 

ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இண்டிகோ நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு காரணம் கேட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்றுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இல்லையென்றால் அபராதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. மேலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்வதில் முனைப்புடன்  செயல்படவில்லை என்று கூறியுள்ளது.

பயணிகளின் வசதி, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமான நிறுவனம் செய்யப்பட்டது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று பாமக பொதுக்குழு.. அன்புமணி பதவியை பறிப்பாரா ராமதாஸ்? என்ன செய்யப்போகிறார் ஐயா?
இன்று பாமக பொதுக்குழு.. அன்புமணி பதவியை பறிப்பாரா ராமதாஸ்? என்ன செய்யப்போகிறார் ஐயா?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று பாமக பொதுக்குழு.. அன்புமணி பதவியை பறிப்பாரா ராமதாஸ்? என்ன செய்யப்போகிறார் ஐயா?
இன்று பாமக பொதுக்குழு.. அன்புமணி பதவியை பறிப்பாரா ராமதாஸ்? என்ன செய்யப்போகிறார் ஐயா?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Tamilnadu Roundup 17th Aug 2025: பாமக பொதுக்குழு.. 12 மாவட்டங்களில் மழை..  தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 17th Aug 2025: பாமக பொதுக்குழு.. 12 மாவட்டங்களில் மழை.. தமிழ்நாட்டில் இதுவரை
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Mettur Dam : மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள் கவலை! இன்றைய நிலவரம் இதோ!
Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள் கவலை! இன்றைய நிலவரம் இதோ!
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Embed widget