மேலும் அறிய

Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்

Trump Puting Zelensky: போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் விடுத்த கோரிக்கையை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trump Puting Zelensky: அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் உக்ரைனின் பங்களிப்பு இருக்க வேண்டும் என, ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதின் வைத்த கோரிக்கை.. 

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனையாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் விடுவிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  டிரம்புடன் மூடிய கதவுகளுக்குள் நடந்த அலாஸ்கா சந்திப்பு குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த தகவலை சொன்னதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது முக்கிய கோரிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டவறில் சமரசம் செய்யப் போவதில்லை என்று புதின் விளக்கமளித்துள்ளார். அதற்கு ஈடாக, ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளான கெர்சன் மற்றும் சபோரிஜியாவின் தெற்குப் பகுதிகளில் சண்டையை நிறுத்தவும், கூடுதல் பிரதேசங்களைக் கைப்பற்ற மேலும் தாக்குதல்களை நடத்தமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

நோ சொன்ன ஜெலன்ஸ்கி..

தொடர்ந்து புதினின் நிலைப்பாடு தொடர்பான தகவலை திங்கட்கிழமை வாஷிங்டனிற்கு வரவுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்துரைத்துள்ளார். ஆனால், அதற்கு ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு தகவலின்படி, நாடோ அல்லாத ஆர்டிகள் 5 பாதுகாப்பை உக்ரைனுக்கு வழங்கவது குறித்து ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.  இது நேட்டோவின் முறையான உறுப்பினர் பதவியை வழங்காமல் கூட்டுப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியாகும். இதுதொடர்பான ட்ரம்பின் பரிந்துரைக்கு அலாஸ்கா சந்திப்பின்போது புதினும் தற்காலிகமாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

”முத்தரப்பு பேச்சுவார்த்தை வேண்டும்”

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பதிலாக அமைதி உடன்படிக்கைக்கு டிரம்ப் அழைப்பு விடுத்து வந்தாலும், முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெறவில்லை என்றால் மாஸ்கோ மீது வலுவான தடைகளை விதிக்கக் கோரி ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். அதன்படி, "ட்ரம்புடனான எனது உரையாடலில், முத்தரப்பு சந்திப்பு இல்லாவிட்டால் அல்லது ரஷ்யா போருக்கு நேர்மையான முடிவைத் தவிர்க்க முயன்றால் தடைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறினேன். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டின் ஈடுபாட்டுடன், பாதுகாப்பு நம்பகமானதாகவும் நீண்ட கால ரீதியாகவும் உறுதி செய்யப்பட வேண்டும். உக்ரைனுக்கு முக்கியமான அனைத்து பிரச்சினைகளும் உக்ரைனின் பங்கேற்புடன் விவாதிக்கப்பட வேண்டும், மேலும் எந்தப் பிரச்சினையும், குறிப்பாக பிராந்திய பிரச்சினைகளை, உக்ரைன் இல்லாமல் முடிவு செய்ய முடியாது” என வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பா நாடுகள் ஆதரவு:

தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் நட்பு நாடுகளுடன் ஒரு வீடியோ காலை கூட்டி, ஜெலென்ஸ்கியின் வாஷிங்டன் வருகைக்கு முன்னதாக உத்திகளை வகுக்க உள்ளன. அலாஸ்கா பேச்சுவார்த்தைகள் போர்நிறுத்தத்தை உருவாக்கத் தவறியதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கி, புதின் மற்றும் ட்ரம்ப் பங்கேற்கும் உச்சிமாநாட்டை மூன்று ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சூழலை சர்வதேச அழுத்தம் உருவாக்கி வந்தாலும், பிராந்தியப் பிரச்சினைகளில் கீவ் மற்றும் மாஸ்கோ இன்னும் ஒற்றை நிலைப்பாட்டை எட்டாதது பலவீனமான முன்னேறத்தை காட்டுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget