Tamilnadu Roundup 17th Aug 2025: பாமக பொதுக்குழு.. 12 மாவட்டங்களில் மழை.. தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 2.42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது; 7 ஆயிரத்து 442 மனுக்களுக்கு தீர்வு
திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து
மக்களின் வாக்குரிமையை பறிக்க மோடி அரசு முயற்சி - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தீபாவளிக்காக ரயில்கள் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது - ஆர்வத்துடன் முன்பதிவு செய்த பயணிகள்
ராமஜெயம் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் - சிபிசிஐடி டிஐஜி வருண்குமார்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரத்து 223 கன அடியாக சரிவு
அனைவரலாலும் எம்ஜிஆராக முடியாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
திமுக-விற்கு வாக்களித்த மக்களுக்கு காெடுத்த பரிசு கடன் - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று சிறப்பு பாெதுக்குழு - அன்புமணிக்கு எதிராக முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்
அண்ணாசாலையில் மேம்பால பணிகள்; சென்னையில் இன்று முதல் அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்





















