
Breaking News LIVE: விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் - உடற்கூராய்வில் தகவல்
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம்
விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் எனவும் ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும் உடற்கூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கிய அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல்
மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மதுரை மருத்துவக்கல்லூரியின் டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம்..!
மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்தது தொடர்பாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த கல்லூரி முதல்வர் ரத்தினவேலு மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்
மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம் - மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு..!
மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் 9 மணிக்கு வந்தால் போதும் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு..!
நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

